திருப்பனந்தாள் ஜமாஅத்

திங்கள், 29 மார்ச், 2010

பாட்லா ஹவுஸ் என்கவுண்டர் போலிதான்.

டெல்லி:தேசிய மனித உரிமை கமிஷனின் போலி என்கவுண்டரின் பட்டியலில் பாட்லா ஹவுஸ் போலி என்கவுண்டரும் இடம்பெற்றுள்ளது.
மொத்தம் 1224 போலி என்கவுண்டரில் பாட்லா ஹவுஸ் என்கவுண்டரையும் தேசிய மனித உரிமைக் கமிஷன் சேர்த்துள்ளது.
2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 19 ஆம் தேதி டெல்லி பாட்லா ஹவுஸில் நடந்த போலி என்கவுண்டரில் உ.பி. மாநிலம் ஆஸம்கரைச் சார்ந்த இரண்டு முஸ்லிம் இளைஞர்களும், போலீஸ் அதிகாரி ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர். இச்சம்பவம் போலி என்கவுண்டர் என்று பல உண்மை அறியும் குழுக்கள் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. ஆனால் காவல்துறையும், அரசும் இதனை ஏற்கவில்லை. மேலும் இதனைத் தொடர்ந்து தேசிய மனித உரிமைக்கமிஷன் விசாரணை நடத்திவிட்டு போலி என்கவுண்டர் நடத்திய காவல்துறையினருக்கு நற்சான்றிதழ் வழங்கி போலி என்கவுண்டர் அல்ல எனக்கூறியிருந்தது.
ஆனால் தகவல் அறியும் உரிமை பணியாளர் அஃப்ரோஸ் ஆலம் ஸஹீலின் கடும் முயற்சிக்கு பிறகு பாட்லா ஹவுஸ் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்ட ஆதிஃப் அமீன் மற்றும் முஹம்மது ஸாஜித் ஆகிய இருவரின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் என்கவுண்டர் போலி என்று கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து தேசிய மனித உரிமைக்கமிஷன் தனது முந்திய நிலைப்பாட்டை மாற்றி பாட்லா ஹவுஸ் என்கவுண்டர் போலி என ஒப்புக்கொண்டுள்ளது.

லேபிள்கள்:

இந்தியாவில் வறுமை கோடுக்கு கீழ் 31% முஸ்லிம்கள்

இந்தியாவில் வறுமை கோடுக்கு கீழ் 31% முஸ்லிம்கள்:
பொருளாதார ஆய்வில் தகவல்

இந்தியாவில் 31 சதவீத முஸ்லிம்கள் வறுமைக் கோடுக்கு கீழ் இருப்பதாக தேசிய பயன்பாட்டு பொருளியல் ஆய்வுக் குழு (என்.சி.ஏ.இ.ஆர்) நடத்திய சர்வேயில் தெரியவந்துள்ளது.

முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மையினர், மதம் மாறிய தாழ்த்தப்பட்டவர்கள் ஆகியோருக்கும் கல்வி வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ரங்கநாத் மிஸ்ரா குழு பரிந்துரை செய்துள்ள நிலையில் இந்த சர்வே முடிவுகள் வெளியாகியுள்ளன.

இந்த ஆய்வில் தெரியவந்துள்ள விவரம்:

10 முஸ்லிம்களில் 3 பேர் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்ந்து வருகின்றனர். இவர்களது சராசரி தனி நபர் மாத வருமானம் ரூ. 550க்கும் குறைவாகவே உள்ளது.

2004-05 ஆண்டு நிலவரப்படி வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள கிராமப்புற முஸ்லிம்களின் சராசரி தனி நபர் மாத வருமானம் ரூ.338.

நாட்டில் பழங்குடி மக்களில் 50 சதவீதம் பேர் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளனர். தாழ்த்தப்பட்ட மக்களில் 32 சதவீதம் பேரும், அதற்கு அடுத்தபடியாக முஸ்லிம்களில் 31 சதவீதம் பேரும் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர்.

முஸ்லிம் சமுதாயத்தில் கல்வி ரீதியாக நிறைய ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் குறு மற்றும் குடிசைத் தொழில்களில் ஈடுபடுவதன் மூலமே வருமானத்தை ஈட்டுகின்றனர் என்று அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 13.8 கோடி முஸ்லிம்கள் உள்ளனர். இது மொத்த மக்கள் தொகையில் 13.4 சதவீதம் ஆகும்.
நன்றி: தட்ஸ்தமிழ்.காம்
முஸ்லிம்களின் பொருளாதார நிலையை உயர்த்திட, ரங்கநாத் மிஷ்ரா கமிஷன் பரிந்துரையை உடனே அமுல்படுத்தகோரி…. மத்திய அரசை வலியுறுத்தி (இன்ஷா அல்லாஹ்….)

ஜூலை-4… ல் சென்னை தீவுத்திடலில்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் – “ஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாடு”!
15லட்சம் முஸ்லிம்கள் பங்கேற்கும் மாநாடு…

மாநாட்டில் பங்கேற்று நம் உரிமையை வென்றெடுக்க நீங்களும் தயாராகுங்கள்!

உங்கள் குடும்பத்தினரையும் தயார்படுத்துங்கள்.
வங்கக்கடலோரத்தை மனிதக் கடலாய் மாற்றுவோம்!

லேபிள்கள்: ,

வியாழன், 25 மார்ச், 2010

நக்கீரன் அலுவலகம் முற்றுகை: தவ்ஹீத் ஜமாஅத் அதிரடி அறிவிப்பு!


நான் தான் நபிகள் நாயகம் என்ற தலைப்பிட்டு மார்ச் 23-26 நக்கீரின் இதழில் வெளியான செய்தியை கண்டித்து இன்ஷா அல்லாஹ் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாளை (25-3-2010) சென்னையில் உள்ள நக்கீரன் அலுவகத்தை முற்றுகையிடும்!

நாள்: 25-3-2010

நேரம்: மாலை 3.30 மணி

இடம்: நக்கீரன் அலுவலகம், சென்னை.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் அதிரடி ஆர்ப்பாட்டத்திற்கு அணி அணியாய் வாருங்கள்!


முஸ்லிம்களை சீண்டி பார்க்கும் நக்கீரனுக்கெதிரான உங்கள் கண்டனங்களை பதிவு செய்யுங்கள்!

லேபிள்கள்:

வியாழன், 18 மார்ச், 2010

இந்து தர்மத்தை அழிக்கும் சுவாமிஜிக்கள்.

(இந்துமத மக்கள் உண்மையை உணர்வதற்காக இந்த கட்டுரை)

சுவாமி என்ற சொல்லுக்கு ஆங்கிலத்தில் மாஸ்டர் என்றும் தமிழில் குரு, ஆசான் என்றும் பொருள். ஆசான் என்பவர் அறிவாளியாக இருக்க வேண்டும் அப்போதுதான் தனது அறிவுத்திறமையின் மூலம் தம்மை பின்பற்றுபவர்களை நல்ல குணத்தை போதிக்க இயலும்!
இந்துமத நம்பிக்கையின் படி சுவாமி எனப்படுபவர் மதபோதகராவார் இவர் இந்துமத வேதங்களை கற்றுணர்ந்து அதை தெளிவாக மக்கள் முன் எடுத்துவைத்து பாவத்திலிருந்து மக்களை தடுத்து நல்லுணர்வு போதிப்பது இவர்களின் பணியாகும்! ஆனால் இன்று குருக்கள், ஆசான் மற்றும் சுவாமி என்ற சொல்லுக்கான இலக்கணம் காலத்திற்கு ஏற்றார் போன்று முற்றிலும் மாறிப் போய்விட்டது! புது டிரென்டு புது ஸ்டைல் இந்த சுவாமிஜிக்களையும் விட்டுவைக்கவில்லை! இன்று மக்களுக்கு ஒழுக்கத்தை போதிக்கக்கூடியவர்கள் ஒழுங்கீணமாக நடந்துக்கொண்டு நல்ல பண்புகளை பெற்றுள்ள மக்களிடம் ஒழுக்கத்தை கற்றுக்கொள்ள வேண்டிய அவலநிலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

பழங்காலத்து சாமியார்களின் நிலை!

கடந்த காலங்களில் (அதாவது 20 வருடங்களுக்கு முன்பு) காவிநிற சாமியார்கள் அழுக்கு நிறைந்த கொண்டையும், தாடியுமாக வாழந்து, உடலை காவிநிற துணியினால் முழுவதுமாக மறைத்தபடி ஏதாவது வேப்ப மர நிழல் கிடைத்தால் போதும் அங்கேயே அமர்ந்திருப்பார்கள். கையில் ருத்ராட்ச மாலை இருக்கும் அருகில் கைத்தடியும் அதில் ஒரு துணி மூட்டையும் இருக்கும்! கேட்பாரற்று அலைந்து திரிவார்கள்!

இடுப்புக்கு கீழே காவி நிற வேஷ்டி அணிந்திருப்பார்கள் மேலும் இடுப்பு மடிப்பில் வாழைப்பழத்தை வைத்திருப்பார்கள். பசி எடுக்கும்போது வாழைப்பழத்தை உறித்து பழத்தை சாப்பிடாமல் தோல் மட்டும் சாப்பிடுவார்கள்!

பரிதாபப்பட்டு ஏன் அய்யா இந்த கோளம் வாழைப்பழ தோலை போய் சாப்பிடுகிறீர்களே என்று யாராவது கேட்டுவிட்டால் உடனே அவர்கள் நான் ஆசையை துறந்தவன், ரூசிக்கு நாம் அடிமையாவதில்லை என்று பதிலளிப்பார்கள்!

வயிறு ஒட்டிக்கொண்டு காணப்படும் கிழிந்த அழுக்கு ஆடையுடன் பார்ப்பதற்கு பரிதாபமாக இருப்பார்கள் அவர்களிடம் யாரும் சென்று குறி கேட்கமாட்டார்கள்! அந்த காலத்து சாமியார்களும் யாரிடமும் கை நீட்டி ஒரு பைசா கூட வாங்க மாட்டார்கள்! கண்ணியமாக வாழ்வார்கள்! வாழ்க்கை முழுவதும் நடை பயணமாகவே நடந்து செல்வார்கள் மரத்தின் நிழலே அவர்களின் உறங்குமிடமாக இருக்கும் அப்படியே கூட மறித்துப்போவார்கள்! வாழும்போது மதிக்காத மக்கள் அந்த சாமியார் மரணித்தவுடன் அந்த மரத்தை தெய்வீகமாக நினைத்து அதற்கு மரத்தடிசாமியார் என்று பெயர் சூட்டி கோவில் கட்டி கொண்டாடுவார்கள்!
இந்தக் காலத்து சாமியார்களின் நிலை!

சிவனைப் போன்று ஜடாமுடி மற்றும் குடுமி கிடையாது அதனால் பேன், ஈறு தொல்லைகள் டென்சன் FREE!

கொண்டைக்கு பதிலாக பெண்கள் போன்ற நீளமான கூந்தல் பேஷன் காரணம் முடியில் சிக்கு விழாது!

தலை முடிக்கு சுத்தனமான தேங்காய் எண்ணை ஆனால் தலையில் பெண்கள் போன்று பூ மடடும் வைப்பதில்லை!

நிறம் மாறாத முடி! (நன்கு கவனித்துப்பாருங்கள் வெள்ளை முடி ஒன்று கூட இருக்காது)

நெற்றியில் அழியாத சந்தனப் பொட்டு,

தினமும் வெல்லாயி போட்ட புதுப்புது காவி உடை!
உடல் முழுவதும் தடவிக்கொள்ள ISI மார்க் சந்தனம்!
உடல் முழுவதும் வாசனை திரவியங்கள்!
குளிர்காலத்தில் இதமான வெண்ணீர் குளியல்!
வெயில் காலத்தில் யோகா பாணியில் மலர் குளியல்!
நடப்பதற்கு சிகப்பு ரத்தினக் கம்பளம்!
கீர்த்தனைகளை போதிக்க புலித்தோல் அமர்வு!
கைகளிலோ தங்கக் காப்புகள்,
கழுத்துக்களிலோ பிளாட்டினம் காசுமாலை
எப்போதும் குளு குளு ஏசி, காய்ந்து போகாத மேக்கப்!

நவீன சுவாமிகளும் அவர்களின் புண்ணகையின் ரகசியமும்!

விஞ்ஞானம் வளர்ந்துவிட்டதால் இந்தக் காலத்து சாமியார்கள் மரத்தடி நிழலை எதிர்ப்பார்ப்பது கிடையாது ஏன்னா இப்போவெல்லாம் டிரண்டு மாறிடுச்சுல்ல!

குளு, குளு ஏசி உடலில் படுவதால் உடல் சோர்வு என்ற பேச்சுக்கே இடமில்லை எனவே தான் மேக்கப் கூட காய் வதில்லை!

· வெயில், எறும்புக்கடி, கொசுத்தொல்லை, வெயில் உஷ்ண சூடு, பாச்சான் வண்டுக்கடி என்று எந்த தொந்தரவும் கிடையாது!
தாகம் ஏற்பட்டால் தண்ணீருக்கு பதிலாக யோகா பழரசம்!

சாமியார்கள் ஏன் திருமணம் புரிவதில்லை! அதனால் என்ன அட்வான்டேஜ்

திருமணம் புரிவதாக இருந்தால் கை நிறைய சம்பாதிக்கணும் அப்போதான் பெண் கொடுப்பார்கள் எனவே வேலை வெட்டி தேடி அலைய வேண்டிவரும்!
தாலி கட்டும்போது சாதாரண அய்யர் மந்திரம் ஓதுவார்! ஆனால் இவர்தான் சுவாமிஜி ஆச்சே அப்போ அய்யருககு கட்டுப்பட வேண்டியிருக்குமே மரியாதை குறைந்திடுமே!
மாதாமதம் குடும்பச் செலவுக்கு ஒரு தொகையை மனைவிக்கு கொடுக்க வேண்டிவரும் அதுக்கு கடன் வாங்கி வட்டி கட்டணுமே!

ஜவுளிகடைக்கு சென்று 4 மணிநேரம் காத்துகடந்து மனைவிக்கு பட்டுப்புடவை எடுத்துக் கொடுக்கும் சிரமம் கொஞ்சம் கூட இல்லையே!

வருமானம் ஏதாவது ஒருமாதத்தில் குறைந்துவிட்டால் உடனே குடும்பச் செலவுக்காக மனைவி தட்டிக் கேட்பாளே வாக்குவாதம் முற்றி தகராறுகள் ஏற்படுமே! ஆஹா என்ன டெக்னிக் அய்யா இது!

குழந்தைகளை நால்தோறும் ஸகூலுக்கு கூட்டிட்டு போகனும், டியுசன் பீஸ் கட்டணும் இல்லையென்றால் குழந்தை விடிந்தவுடன் கண்களை கசக்கிக்கொண்டு நிற்கும்!
குழந்தைகளுக்கு காதுகுத்து விழா நடத்தி, டிரஸ் எடுத்துக் கொடுத்து உற்றார் உறவினர்களுக்கு கடா வெட்டி சோறு போட்டு ஆண்டியாகனும்!

ஆண்டுக்கு ஒருமுறை குடும்பத்துடன் சுற்றுலா சென்று 15,000 செலவு செய்யனும் அதுக்காக கடன் வாங்கி வட்டி கட்டணும் இல்லையென்றால் குழந்தைகள் முகம் சுழிக்கும்!
எனவேதான் இந்த குளு குளு சாமியார்கள் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றும் மாற்றந்தோட்டத்து மல்லிகை மணக்கிறதா? நாறுகிறதா? என்ற பழமொழிக்கேற்பவும் அலைந்து திரிகிறார்கள். மேலும் எப்போதும் எங்கேயும் கொண்டாட்டம் என்ற பாடலுக்கேற்ப புண்ணகை பூத்த மலர்ந்த முகத்துடன் மக்களுக்கு காட்சியளித்து அருள்பாலிக்கிறார்கள்! சிந்தித்துப் பாருங்கள் குறைந்தபட்சம் இவர்களுக்கு ஒரு வண்டு கடித்து வலி ஏற்பட்டால்தானே முகத்தில் துயரம் தெரியும் ஆனால் இவர்களுக்கு சொரணைகூட கிடையாதே வேதனை எப்படி தெரியும்!

நவீன சுவாமிஜிக்களின் அறைகள்

ஒவ்வொரு அறைக்கும் ஏசி! மொஸைக் & டைல்ஷ் தறை
ஒவ்வொரு அறையிலும் தெய்வீக தன்மையை உணர்வதற்காக கமகமக்கும் கற்பூறம் மற்றும் ஊதுபத்தி வாசனைகள்!
திரும்பும் இடமெல்லாம் கலர் டி.வி. கூடவே டிஷ்!
உறங்குவதற்கு இலவம்பஞ்சு மெத்தை, தலைக்கு, இடுப்குக்கு, காலுக்கு என்று டிசைன் டிசைனாக தலையனைகள்!
சிகப்பு ரத்தின கம்பளத்தில் நடந்து நடந்து கால்கள் வலி ஏற்படுகிறதாம் எனவே கால்களை அமுக்கிவிட இளம் துறவிகள்.

நவீன சுவாமிஜிக்களிடம் மக்கள் மயங்குவது ஏன்?
சமுதாயத்தில் குடும்பத் தகராறுகள், மாமியார் மருமகள் சண்டைகள், சொத்து தகராறு, குழந்தை பாக்கியமின்மை, விதவை கோளம், செவ்வாதோஷத்தினால் திருமணம் தள்ளிப்போடப்பட்டு வயது முதிர்ந்தும் திருமணம் நடைபெறாமை மற்றும் வருமை ஆகிய காரணங்களால் விரக்தியடைந்த மக்கள் எங்கேயாவது நிம்மதி கிடைக்குமா? யாராவது ஆறுதலாக பேசுவார்களா? என்று ஏங்கித் தவிக்கின்றனர் அந்த சூழ்நிலையை இந்த மோசடி அம்பளவான்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு மக்களை மதிமயங்கச் செய்து தங்களிடம் வருபவர்களை அடிமைகளாக்கி விடுகின்றனர்.
மக்களை மதிமயங்கச் செய்ய நவீன சுவாமிஜிக்கள் (காவிநிற அசாமிகள்) பயன்படுத்தும் மோக வார்த்தைகள்! இதோ படியுங்கள் இந்த வார்த்தைகளை கேட்டால் விரக்தியடைந்த மக்கள் ஏன்தான் மயங்கமாட்டார்கள்!

அன்பே கடவுள்,

கடவுள் அன்பின் வடிவமாக உள்ளார்

நீங்களோ கடவுளின் குழந்தையதாக இருக்கிறீர்கள்!


கடவுளின் குழந்தைகளே நீங்கள் அன்பின் தூதுவர்கள்!
எல்லோர் மீதும் அன்பு செலுத்துங்கள்! அன்பாய் இருங்கள்!


ஆசிரமம் எங்கு உள்ளதோ அங்கு சுவாமி இருப்பார்!
சுவாமிஜி உங்களுடன் இருக்கிறார்!
உங்கள் உள்ளத்தில் இருக்கிறார்


கடவுள் இருக்கும் இடமே சுவாமியின் இருப்பிடம்!
நீ ஒரே ஒரு தடவை சுவாமிஜியை சந்தித்துப்பார்
அப்புறம் நீ அவருடைய தீவிர பக்தனாயிடுவாய்
உன் கவலைகள் அனைத்தும் உன்னை விட்டு விலகும்
இதோ தனது பிறந்த நாளை ஒட்டி ஒரு பிரபலமான கிழட்டு சுவாமிஜி மக்களுக்கு வழங்கிய அறிவுரைகளைக் கேளுங்கள்:
அன்பே சிவம். சிவமே அன்பு.
அன்புள்ள இடத்தில் ஆண்டவன் இருப்பார்.
ஆழ்ந்த அன்பு கொண்டு மக்களுக்கு அன்பு செய்யுங்கள்.
உங்களிடம் ஊற்றெடுக்கும் அன்பினை தொண்டாக மாற்றுங்கள்.


தயிரை மத்தினால் கடையக், கடைய மோர் தனியாகவும், வெண்ணெய் தனியாகவும் பிரியத் துவங்கும். அதுபோல, ஆன்மிக சக்தியால் உள்ளத்தைக் கடைந்தால் அசத்தியம் விலகி சத்தியமாகிய கடவுள் வெளிப்படுவார்
ஒவ்வொருவர் வாழ்விலும் நான்கு நாட்களே சிறப்பான நாட்கள். பக்தர்கள் ஒரே இடத்தில் கூடி கடவுளின் பெருமையைப் பாடும் நாள், பசித்தவர்களுக்கு பசியாற உணவிடும் நாள், சாதுக்கள், நல்லவர்களைச் சந்திக்கும் நாள், தனிமனிதனுக்கு ஞானம் பிறக்கும் நாள்
முற்றும் உணர்ந்தவர்கள் மவுனமாக இருப்பார்கள். அவர்களின் ஒரே மொழி அமைதி மட்டுமே. பேச்சில் நிதானத்தைப் பழகிக் கொள்ளுங்கள். மவுனத்தைப் பழகப் பழக நம்மிடம் உள்ள ஆற்றல் வெளிப்படத் துவங்கும்
இந்த சுவாமிஜிக்களின் போதனைகளை அவர்களுடைய லீலைகளை வைத்து சற்று கவனமாக சிந்தித்துப்பாருங்கள்
சாதுக்கள், நல்லவர்களைச் சந்திக்கும் நாள்
முற்றும் உணர்ந்தவர்கள் மவுனமாக இருப்பார்கள். அவர்களின் ஒரே மொழி அமைதி மட்டுமே. பேச்சில் நிதானத்தைப் பழகிக் கொள்ளுங்கள். மவுனத்தைப் பழகப் பழக நம்மிடம் உள்ள ஆற்றல் வெளிப்படத் துவங்கும்
அதாவது சுவாமிஜிக்களின் ஆசிரமங்களில் நடக்கும் லீலைகளை முற்றும் உணர்ந்தவர்கள் மவுனமாக இருக்க வேண்டும்! பாவத்தை கண்டும் காணாமல் அமைதியாக இருக்க வேண்டும், நிதானமாக இருக்க பழக வேண்டும், தங்களிடம் பழக பழக ஆற்றல் வெளிப்படும் அதாவது இவர்களின் லீலைகள் தொண்டர்களுக்கு வெளிப்படுமாம்! என்ன கொடுமை அய்யா இது!
சுவாமிஜிக்களிடம் வரும் செல்வந்தர்கள் நடிகர்கள்!
எப்போதுமே சுவாமிஜிக்களுக்க அரசியல் செல்வாக்கு அமோகமாக இருக்கும் எனவேதான் சில செல்வந்தர்கள் தங்களுக்குத் தேவைகளை அரசியல்வாதிகளிடம் காரியம் சாதிக்க இந்த சுவாமி (அசாமிகளை) நாடுகிறார்கள் அதற்கு சில கணிசமான ஊக்கசத் தொகை இந்த சுவாமிகளின் சன்னிதானத்தில் கொட்டப்படுகிறது! (Income Tax இல்லாத அன்பளிப்பு வருமானம்)
சினிமா நடிகர்களும் மனிதர்கள்தானே அவர்களுக்கும் கடவுள் பயம் இருக்கத்தான் செய்யும் எனவேதான் தாங்கள் சம்பாதிக்கும் பாவமான வருமானத்தை கண்டு நரக பயம் ஏற்பட்டு அதை போக்கிக்கொள்ள இந்த பாவிக்களிடம் சென்று பாவ விமோச்சம் தேடுகிறார்கள் மேலும் சினிமாவில் ஹீரோயினிக்களை பற்றி சொல்லவா வேண்டும் புது நடிகை வந்துவிட்டால் பழைய நடிகையின் மார்க்கெட் குறைந்துவிடுகிறதே என்ன செய்வது தங்கள் வருமானம் பாதிக்கப்படக்கூடாதே எனவே இந்த ஆசாமிகளை நாடுகிறார்கள்! இந்த ஆசாமிகள் கை காட்டுபவருக்கு கூட கால்சீட் கிடைக்கிறதே!
சுவாமிஜிக்கள் விமானத்தில் ஏறுவதற்கும் உலகச் சுற்றுப் பயணம் செய்வதற்கும் எந்த இடையுறுகளும் கிடையாது இவர்களை யாரும் செக்கிங் செய்வதில்லை அந்த அளவுக்கு அரசியல் செல்வாக்கு எனவேதான் சில பெரும் வணிகர்கள் இவர்களின் நட்பை பலப்படுத்திக்கொள்கிறார்கள். விலைமதிப்பற்ற சட்ட விரோதமான பொருள்கள் கூட சுவாமிஜிக்களின் சூட்கேஸ் மூலம் கடத்தப்படலாமே!
முடிவுரை
மக்களே கீழ்கண்ட உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வின் வார்த்தைகளை சற்று செவிதாழ்த்தி கேளுங்கள் நல்லுணர்வு பெற முயலுங்கள்!
(ஷைத்தான்) அவர்களுக்கு வாக்களிக்கின்றான் அவர்களுக்குப் பொய் நம்பிக்கையும் ஊட்டுகின்றான். எனினும் ஏமாற்றுவதற்கன்றி ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிப்பதில்லை. (அருள்மறை குர்ஆன் 4:120)
மக்களே இதோ கீழ்கண்ட அருள்மறை வசனத்தின் மூலம் அல்லாஹ்வின் அருட்கொடையை சிந்தித்துப்பாருங்கள்

அவன் வானங்களைத் தூண்களின்றியே படைத்துள்ளான். அதனை நீங்களும் பார்க்கிறீர்கள். உங்களுடன் பூமி அசையாதிருப்பதற்காக அவன் அதன் மேல் மலைகளை உறுதியாக நிறுத்தினான்; மேலும் அதன் மீது எல்லா விதமான பிராணிகளையும் அவன் பரவவிட்டிருக்கின்றான்; இன்னும் நாமே வானத்திலிருந்து மழையை பொழியச் செய்து அதில் சங்கையான, வகை வகையான (மரம், செடி, கொடி ஆகியவற்றை) ஜோடி ஜோடியாக முளைப்பித்திருக்கின்றோம் (அல்குர்ஆன் 31:10)
இவை(யாவும்) அல்லாஹ்வின் படைப்பாகும் – அவனன்றி உள்ளவர்கள் எதைப் படைத்திருக்கின்றனர் என்பதை எனக்குக் காண்பியுங்கள்” (என்று அவர்களிடம் நபியே! நீர் கூறும்.) அவ்வாறல்ல அநியாயக்காரர்கள் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருக்கின்றனர். (அல்குர்ஆன் 31:11)
மக்களே ஸலாம்! உங்கள் மீது அமைதி உண்டாவதாக!
நம்முடைய ஆதிபிதா ஆதம் (அலை) அவர்கள் எவ்வாறு அல்லாஹ்வை வணங்கி அவனுக்கு அஞ்சி வாழ்ந்து மடிந்தாரோ அதுபோன்று நாமும் நம் ஆதிபிதாவின் மார்க்கமான இஸ்லாம் எனும் அமைதியின் பக்கம் திரும்பி இம்மை மற்றும் மறுமையில் வெற்றி பெற்று சுவனம் செல்ல முற்படுவோமாக! அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காடடுவானாக!
இந்த சாமியார்களையும், சுவாமிஜிக்களையும் விட்டுவிடுங்கள் இவர்கள் கேடுகெட்ட ஆசாமிகள்தான்! அருள்மறை குர்ஆனை ஒருமுறையாவது இனிய தமிழ்மொழியில் படித்து நல்லுணர்வு பெறுங்கள்! அதில் உள்ள கருத்துக்கள் உங்கள் உள்ளங்களை அமைதிபடுத்தும் நேர்வழியை உணரச் செய்யும்! முடிந்தவரை முயற்சி செய்து தமிழ் மொழிபெயர்ப்பு குர்ஆனை படித்துப்பாருங்கள்! வல்ல ரஹ்மான் அருள்புரிவானாக!
அல்ஹம்துலில்லாஹ்! (நம்மை படைத்த இறைவன் அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்!)


Thanks - Kadayanallur Aqsa web site

நித்தியானந்தனின் புதுப்புது பொய்கள்.

ரஞ்சிதா சேவை செய்த போது நான் சமாதி நிலையில் இருந்தேன்: நித்தியானந்தனின் புதுப்புது பொய்கள்
ஹரித்வார்: நடிகை ரஞ்சிதா தனக்கு ‘சேவைகள்’ செய்த சமயத்தில் நான் பிரக்ஞையற்று சமாதி நிலையில் இருந்தேன் என்று நித்தியானந்தா கூறியுள்ளார்.
ஹரித்வாரில் கும்பமேளாவில் இருப்பதாகக் கூறப்படும் நித்தியானந்தா டைம்ஸ் நவ் டிவி சேனலுக்கு அளித்த பேட்டி:
கேள்வி: கடந்த 2 வாரங்களாக உங்களைப் பற்றி வரும் குற்றச்சாட்டுகள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
நித்தியானந்தா: தற்போதைய விவகாரத்துக்கு முன்னரும், பின்னரும் யூ டியூப் தேடலில் நான்தான் உச்சத்தில் இருந்துள்ளேன். முன்பு ஆன்மிக குரு என்ற அடிப்படையிலும், தற்போது மோசடி என்ற பெயரிலும் அதிகளவில் வீடியோவில் காட்டப்படுகிறேன்.
எனது 33 ஆண்டுகள் பொதுவாழ்வில் இரண்டு எதிரெதிர் முனைகளையும், புகழின் உச்சத்தையும், தாழ்வையும் தொட்டுவிட்டேன்
இவை எனக்கு வாழ்க்கையின் இதர பரிமாணங்களை கற்றுத் தந்திருக்கின்றன. இதுவரை பார்க்காத பரிமாணங்களை நான் கண்டுவருகிறேன்.
எனக்கு எதிராக இந்த அளவுக்கு ஒரு பகைமை உருவாகும் என்றோ, என்னை மக்கள் ஒரு எதிரியாக பார்ப்பார்கள் என்றோ நான் கனவிலும் நினைக்கவில்லை.
இந்த கஷ்டமான நேரத்திலும் எனக்கு ஆதரவு தெரிவித்து லட்சக்கணக்கான இ-மெயில் கடிதங்கள், போன் அழைப்புகள், ஆதரவு குரல்கள் உலகின் பல்வேறு மூலை முடுக்குகளில் இருந்தும் வந்து கொண்டு தான் இருக்கின்றன. அவை தான் எனக்கு ஆறுதல்.
கேள்வி: சர்ச்சைக்குரிய அந்த வீடியோ காட்சிகளில் இருப்பது நீங்கள் தானா?
நித்தியானந்தா: ஆமாம். அதை மறுக்கவில்லை. ஆனால் அதில் நிறைய தவறான சித்தரிப்புகள், இடைச்செருகல் மற்றும் மார்ஃபிங் நடந்துள்ளன.
வீடியோ காட்சிகளில் எந்தெந்த இடங்களில் ‘மார்ஃபிங்’ செய்யப்பட்டுள்ளது என்பதை அறிய அவற்றை லண்டனுக்கு ஆய்வுக்கு அனுப்பியிருக்கிறோம்.
அந்த வீடியோவில் காணப்படும் காட்சிகள் எடுக்கப்பட்ட காலகட்டத்தில் நான் பிரக்ஞையற்ற நிலையில் இருந்தேன். அப்போது நான் மனதளவில் சமாதி நிலையிலும் உடலளவில் நலமில்லாமலும் இருந்தேன்!
என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை முறை திரிக்கப்பட்டும், தவறானதாகவும் சித்தரிக்கப்பட்டு வெளியுலகுக்கு காட்டப்பட்டுள்ளது. எனது ‘பிரைவசி’ பறிபோயுள்ளது.
அதோடு நான் குளித்துவிட்டு உடை மாற்றுவதைக் கூட மீடியாக்கள் படமெடுத்துள்ளன. இது நிச்சயமாக என்னை அவமதிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே நடந்துள்ளது.
கேள்வி: வீடியோவின் சில பகுதிகள் திரிக்கப்பட்டு இருப்பதாக கூறுகிறீர்கள். அவர் நடிகைதானே… அந்த நடிகை (ரஞ்சிதா) உங்களுக்கு சேவை செய்தாரா? இந்த வீடியோ காட்சிகள் டிசம்பர் மாதம் எடுக்கப்பட்டவை என்று அவர்கள் கூறுகிறார்கள். அதன் பிறகு அந்த நடிகை ஆசிரமத்தில் இருந்தாரா?
நித்தியானந்தா: ஆம்.. நடிகை ரஞ்சிதாதான் அது. அதை நான் மறுக்கவில்லை. மறைக்கவுமில்லை. ரஞ்சிதா என் பக்தையாக இருந்தார், இருக்கிறார், இருப்பார். அவர்களது மொத்த குடும்பமும் எனது பக்தர்கள்.
ரஞ்சிதா எனக்கு நீண்ட காலமாக எனக்கு சேவை செய்பவர். அந்த காலகட்டத்தில் எனக்கு அடிக்கடி உடல்நலம் சரியில்லாமல் இருந்தேன். நீண்ட நாள்கள் அப்படியிருந்தேன். அப்போது அவர் தான் என்னை முழுவதுமாக மனமுவந்து கவனித்துக் கொண்டார்.
அந்த வீடியோ படம் எடுக்கப்பட்டபோது உண்மையில் நான் உடல் நலமற்று… ‘சமாதி’ நிலையில் இருந்தேன்.
சில நபர்கள் தவறாக விரும்பியதால் அவற்றை தவறாக செய்து இருக்கிறார்கள் என்று என்னால் சொல்ல முடியும்.
கேள்வி: உங்களை பின்பற்றுபவர்களுக்கு நீங்கள் உண்மையானவராக இல்லையே?
நித்தியானந்தா: தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். பிரமச்சரியம் என்பது தனி நபர்களின் விஷயம். அவற்றை அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று நான் எப்போதுமே சொல்லி வந்திருக்கிறேன்.
அந்த விஷயத்தில் நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று நான் எப்போதுமே சொன்னேன். என்ன நடக்கிறது என்பதை உணரும் பிரக்ஞையுடன் உங்களுக்கு ‘பயோ-மெமரி’ அதிகளவில் இருக்குமானால், மற்றவர்களின் தேவை குறைவானதாக இருக்கும்.
உங்களது பயோ- மெமரி வேறு சிலரின் தேவையில் இருந்தால் திருமண வாழ்க்கையுடன் சந்தோஷமாக வாழலாம். தனி நபர்கள் அவர்கள் விரும்பியபடி தங்களது நிலையை தேர்வு செய்து வாழ வேண்டும் என்று நான் எப்போதும் கூறுகிறேன்.
எனது சொந்த விஷயத்தில் சிலர் ஏன் நுழைந்தார்கள்? இதில் சதி திட்டமோ அல்லது வேறு ஏதோ இருக்கிறது என்பது உறுதி. அவர்கள் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து முடித்துவிட்டனர்.
இந்த வீடியோ எனக்கு எதிரான மிகப் பெரிய சதி. ஆனால், அது குறித்து எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ரத்தத்தை வைத்து ரத்தத்தைக் கழுவ முடியாது.
எனது பல்வேறு சேவைகளை கருத்தில்கொண்டு இதனை சமுதாயம் நிராகரித்திருக்க வேண்டும். எனக்கு இன்னுமொரு வாய்ப்புத் தாருங்கள்.
எனக்கு காமம் இல்லை. அதை 100 சதவிகிதம் சொல்வேன்.
விரைவில் பெங்களூருக்கு வருவேன்
கேள்வி: மீண்டும் ஆஸ்ரமத்திற்கு திரும்புவீர்களா?
நித்யானந்தா:‘எனது நிலையை சீடர்கள் புரிந்து கொண்டுள்ளனர். நான் ஹரித்வாரில் ஒளிந்து கொண்டிருக்கவில்லை.
நான் எந்தக் குற்றச் செயலிலும் ஈடுபடவில்லை. கும்பமேளாவில் எனது கடமைகள் முடிந்தபின் நான் பெங்களூர் ஆஸ்ரமத்துக்குத் திரும்புவேன்.
இந்த வழக்கு தொடர்பாகவோ, குற்றச்சாட்டுகளை விசாரிக்கவோ போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் யாரும் என்னைத் தொடர்பு கொள்ளவில்லை’ என்றார்.
குறிப்பு: நித்யானந்தனை போலீசார் தேடி வருவதாக தமிழக – கர்நாடக போலீசார் கூறி வருகிறார்கள். அவரைக் காணவில்லை என்று அறிவித்தும் உள்ளனர். ஆனால் இந்த நபரோ ஹரித்துவாரில் அமர்ந்தபடி டைம்ஸ் நவ், ஈடிவி சேனல்களுக்கு கூலாக பேட்டி கொடுத்துக் கொண்டுள்ளார்.
குறிப்பு 2: இந்த நபரின் பேட்டியை மீண்டும் வெளியிடும் நோக்கம் நமக்கு முதலில் இல்லை. ஆனால் ஆன்மீகத்தில் பெயரில் ஒருவன் எப்படியெல்லாம் சந்து பொந்துகளில் ஓடி ஒளிய முடியும் என்பதற்கு இந்த நித்யானந்தன் இன்னுமொரு எடுத்துக்காட்டு என்பதைக் காட்டவே இதைத் தருகிறோம்.

Thanks - http://kadayanalluraqsha.com/?p=2946

ஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாடு - ஜூலை-4…சென்னை தீவுத்திடலில்

ஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாடு

இன்ஷா அல்லாஹ்….

ஜூலை-4… ல்

சென்னை தீவுத்திடலில்.

ரங்கநாத் மிஷ்ரா கமிஷன் பரிந்துரையை உடனே அமுல்படுத்தகோரி…. மத்திய அரசை வலியுறுத்தி சென்னையில்….

15லட்சம் முஸ்லிம்கள் பங்கேற்கும் மாநாடு…

மாநாட்டில் பங்கேற்று நம் உரிமையை வென்றெடுக்க நீங்களும் தயாராகுங்கள்!

உங்கள் குடும்பத்தினரையும் தயார்படுத்துங்கள்.
வங்கக்கடலோரத்தை மனிதக் கடலாய் மாற்றுவோம்!

அன்புடன் அழைக்கின்றது,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா-அத் மாநிலத்தலைமையகம்